தமிழ்நாடு     மதுரை     கும்பகோணம்


ஒரு குழுமம் என்பது ஒரே மாதிரியான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் மற்றும் பொதுவான வாய்ப்புகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்கும் பிரிவுகளின் ஒரு புவியியல் செறிவு (நகரம்/சிறுநகரம்/சில அருகாமையிலுள்ள கிராமங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பகுதிகள்) என வரையறுக்கப்படுகிறது. ஒரு கைவினைஞர் குழுமம் என்பது கைவினை/கைத்தறி பொருட்களை தயாரிக்கும் புவியியல் செறிவான (பெரும்பாலும் கிராமங்கள்/சிறுநகரப் பகுதிகளில்) குடும்பப் பகுதிகள் ஆகும். ஒரு பொதுவான குழுமத்தில், அப்படிப்பட்ட உற்பத்தியாளர்கள் அடிக்கடி ஒரு பாரம்பரிய சமுதாயத்தை சார்ந்திருப்பார்கள், அவர்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட காலம் நிறுவப்பட்ட பொருட்களை தயாரிப்பார்கள். உண்மையில், பல கைவினைஞர் குழுமங்கள் நூற்றாண்டு காலமாக கைவினைஞர்களை கொண்டுள்ளது.

கும்பகோணம் குழுமம் பற்றி:-

கும்பகோணம் குழுமம் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் கீழ் அமைகிறது.

கும்பகோணம் குழுமத்தால் 120க்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களை உருவாக்க முடியும் & 8 SHG-கள் பலமான வேலைக் குழுவை ஆதரிக்கின்றது. ஆள் திரட்டுதல் நாளுக்கு நாள் வேகத்தை பெறுகிறது.

கல் கைவினைப்பொருள்:-

தமிழ்நாட்டின் கல் கைவினைப் பொருள்கள் ஒரு ஒரு குறிப்பிடத்தக்க தரம் மற்றும் பாணியை பெற்றுள்ளது. பேரரசர்களின் வளமான கலாச்சார நம்பகத்தன்மை மற்றும் தாராளத்தன்மையின் பண்டைய மற்றும் மத்திய கால அரசகுலத்தின் ஆதரிப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் கல் கைவினைப்பொருள்கள் தன் தனித்த அடையாளத்தை பெற்றுள்ளது. தொழ்பொருள் ஆராய்ச்சி பகுதிகள் அகழ்வு சான்றுகள் பளிங்குக் கல் சிறு உருவச் சிலைகள் மற்றும் சிற்பச் சிலைகள் உள்ளடக்கிய கைவினை கலைஞர்களின் படைப்பு நேர்த்தியை வெளிக்காட்டுகிறது. இவைகள் தமிழ்நாட்டின் கைவினைஞர்களின் சிறந்த கலைத்திறனிற்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவைகளாகும். தமிழ்நாட்டில் கல் கைவினைப் பொருள்களின் முதன்மையான மையங்கள் மாமல்லபுரம் மற்றும் செங்கல்பட்டில் அமைந்துள்ளன, இங்கே உயர்வான கிரானைட் கல் குடைவுகள் பெருமளவில் காணப்படுகின்றன. இவைகள் உள்ளூர் விஷ்வகர்மா மற்றும் கம்மாளர் சமுதாயங்களின் படைப்பு வளங்கொழிப்பு ஆகும். தமிழ்நாட்டின் கைதேர்ந்த கைவினைஞர்கள் சவரக்கல் அல்லது மாக்கள் குடைவுகளை உருவாக்குவதிலும் தேர்ச்சி பெற்றவர்களாவார்கள். இந்த சிற்பங்கள் புதுச்சேரி மற்றும் கடலூர் இடையேயான பகுதிகள் மற்றும் சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் ஆதிக்கம் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டின் கல் கவினைப்பொருட்கள் அழகிய குடைவு கோயில்களுக்காக போற்றப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றான மதுரையில் உள்ள மீனாட்சி கோயில், மண்டபங்கள், கல் தூண்கள், உயர்ந்தோங்கிய கோபுரங்கள் (வாயில்) போன்றவை இந்த இடத்தின் கல் கைவினைப் பொருளின் தனி முத்திரைகளாகும். அழகிய படைப்புகள் சிதம்பரத்தில் அமைந்துள்ள நாட்டிய சாஸ்த்ராவின் 108 காரணாக்களை சித்தரிக்கிறது. காஞ்சிபுரம் பல்லவர்கள் மற்றும் நாயக்கர்கள் மேலும் வெற்றிகரமான நேரங்களின் போதான கைவினைஞர்களின் வெவ்வேறு விதமான சிறந்த படைப்புகளை காண்பிக்கும் இடமாக விளங்குகிறது. ஏகாம்பர ஈஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜர் கோயில் ஆகியவையும் பாணியின் முன்மாதிரியாக விளங்குகின்றன மேலும் கைவினைஞர்களின் படைப்புகள் சிற்ப சாஸ்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பத் திறன்களை பராமரிக்கின்றனது.

தமிழ்நாட்டின் கல் கைவினைப்பொருள்கள்  கல்லின் உள்நாட்டு மாறுபாடுகள் மற்றும் படைப்புகளின் ஒரே இயல்புடைமை ஆகியவற்றை காட்டுகிறது. இவை கல் குடைவின் தோற்றங்களில் மாநில தனித்தன்மையை குறிக்கின்றன. 

பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் :-

தமிழ்நாட்டில் கல் கைவினைப்பொருள்களின் அடிப்படை பொருள், மார்பிள்(சலவைக்கல்), வெவ்வேறு விதமான கற்கள் ஆகும். தமிழ்நாட்டின் கைவினைஞர்கள் கல்லை வெட்டவும், தேய்க்கவும், மெருகிடவும் மற்றும் பளபளப்பாக்கவும் நாட்டுத் தயாரிப்பு இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். சில இடங்களில் கைவினைஞர்கள் இன்னமும் குடைவு மாதிரிகள் மற்றும் வடிவங்களை கொண்டு வருவதற்கு உளி மற்றும் சுத்தியலை பயன்படுத்துகின்றனர், அதைத் தொடர்ந்து தேய்த்தலும் பளபளப்பாக்குதலும் செய்யப்படுகின்றன.

செயல்முறை:-

கைவினைஞர்கள் கல்லில் வேலை செய்ய்யும் முன், முதலில் கல்லில் இயற்கையாக உள்ள வடிவத்தை ஆராய்ந்து வேலை செய்ய தேர்ந்தெடுப்பார்கள்.  அதற்குப் பிறகு உளி மற்றும் சுத்தியல்களை கொண்டு வடிவங்கொடுத்தல் செய்யப்படுகின்றன. வெப்ப உற்பத்தியை தவிர்க்க தண்ணீர் தொடர்ச்சியாக தெளிக்கப்படுகின்றது. கல் உப்புத்தாள்கள் அல்லது அரத்தைக் கொண்டு தேய்ப்பதன் மூலம் வழவழப்பாக்கப்படுகின்றது.

உற்பத்தி செய்யப்பட வேண்டிய வடிவத்தின் பரிமாணங்கள் ஒரு கல் பலகையில் குறிக்கப்படுகின்றன. கூடுதல் முனைகள் பலகையிலிருந்து சுத்தியலால் அடிப்பதன் மூலம் நீக்கப்படுகின்றன. கல்லின் பெரிய துண்டுகள் சிறிய பலகைகளாக செங்குத்தாக வெட்டப்படுகின்றன, மேலும் அதன் மீது தற்காலிகமான படம் வரையப்படுகின்றது. கலைப்பொருள் பலகையிலிருந்து ஒரு அரத்தின் உதவியுடன் எடுக்கப்படுகின்றது. இந்த பலகை இப்போது விருப்பப்பட்ட வடிவமாக ஒரு சுத்தியல் மற்றும் ஒரு உளியால் மாற்றப்படுகின்றது. சிறிய குடைவுகள் கூரான உளியால் செய்யப்படுகின்றது. ஒரு சுத்தியல் மற்றும் உளி மேற்கொண்டு சமதளமாக்கலை செய்கின்றன. குடையப்படும் முன் கல் இரவு முழுவதும் கொதிக்கும் நீரில் வைக்கப்படுகிறது மேலும் வேதியியல்ரீதியாக கையாளப்படுகின்றது. இது கல்லின் பரப்பை மிருதுவாக்குகிறது மற்றும் வெண்மையாக்குகின்றது. பளபளபாக்குதல் இறுதிப் பூச்சிற்காக மண் அல்லது கார்போரண்டம் துண்டுகளால் செய்யப்படுகின்றன. சில குடையப்பட்ட செயற்கைப் பொருட்கள் வண்ணம் தீட்டப்படுகின்றன. மற்றவைகள் காணும் கண்ணாடிகள், பித்தளை பொருத்தி போன்ற்வைகளால் பொருத்தப்படுகின்றன.

ஒரு உருவத்தை குடைவதில், கல் குடைபவர் கல் - துண்டின் மீது சிற்பத்தின் ஒரு தற்காலிக சுருக்கமான தோற்றத்தை வரைவார். கைவினைஞர்கள், வேலை செய்யும்போது நீரை கல்லின் மீது தெளிப்பார். ஏனெனில் தேவையில்லாத பொருள்களை தொடர்ச்சியாக செதுக்கித் தள்ளுவதன் காரணமாக உருவாகும் உராய்வால் கருவிகள் சூடாகும். பளபளப்பாக்குதல் உப்புத்தாள் தேய்த்தல், முல்தானி-மிட்டி அல்லது களிமண், எண்ணெய் மற்றும் துணியால் பளபளப்பாக்குதல் ஆகியவை முதல் பல்வேறு விதங்களில் செய்யப்படுகின்றது.

ஏற்கனவே தகுந்த அளவில் வெட்டப்பட்ட கடினமான அல்லது மிருதுவான கல்லில் ஒரு சுருக்கமான தோற்றம் வரையப்படுகின்றது. சுருக்கமான தோற்றம் வடிவத்தை சுட்டிக்காட்டும் விதத்தில் செதுக்கப்பட்ட பிறகு, இறுதி வடிவம் தேவையில்லான பகுதிகளை நீக்குவதன் மூலம் கொண்டு வரப்படுகின்றது. கடினமான கற்களில் இது தேவையில்லாத பகுதிகளை செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றது. மென்மையான கற்களில் இது ஒரு கூரான தட்டை முனை இரும்புக் கருவியால் வெட்டுவதன் மூலம் செய்யப்படுகின்றது.

தொழில்நுட்பத் திறன்கள்:-

பின்வருவன முக்கிய தொழில்நுட்பத் திறன்களாகும்:-

1. வெட்டுதல்

2. தேய்த்தல்

3. மெருகிடுதல்

4. பளபளப்பாக்குதல்

எப்படி சென்றடைவது:-

விமானம் வழியாக:-

மதுரை தனக்கான விமான நிலையத்தை கொண்டுள்ளது, இது நகர மையத்திலிருந்து 10 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சென்னை, பெங்களூர், திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களுக்கு தினமும் விமான்ங்கள் உள்ளன.

சாலை வழியாக:-

மதுரை தோராயமாக சென்னையிலிருந்து 447 கிமீ தூரத்திலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து 128 கிமீ தூரத்திலும், பெங்களூரிலிருந்து 435 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து முதன்மையான நகரங்களுடன் மதுரையை இணைக்கும் சிறந்த சாலைகள் உள்ளன. 5 முதன்மையான பேருந்து நிலையங்களோடு, இந்நகரம் சாலை வழியே சிறந்த பயணத்தை வழங்குகிறது. பல தனியார் இயக்குநர்கள் சென்னையிலிருந்து மதுரைக்கு குளிர்பதன சக்தியுடனும், இல்லாமலும் முதல்தர மற்றும் தூங்கும் வசதியுள்ள பேருந்துகளை இயக்குக்கின்றனர். நீங்கள் கார் மூலம் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், திண்டிவனம், திருச்சி மற்றும் திண்டுக்கல் வழியாக மதுரைக்குச் செல்லும் NH45-ஐ தேர்ந்தெடுக்கவும். NH45 வழியாக உங்களை திருச்சிக்கு கொண்டு செல்லும் ஒரு மாற்று வழியும் உள்ளது. அங்கிருந்து மேலூர் வழியாக மதுரைக்குச் செல்லும் NH45B-ஐ தேர்ந்தெடுக்கவும்.

இரயில் வழியாக:-

மதுரை, ஒரு முக்கிய வழிபடுதலமாக உள்ளது, மேலும் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் இருப்பிடமாக உள்ளது. இது தனக்கென்று ஒரு இரயில் நிலையத்தை பெற்றுள்ளது. உண்மையில், இந்நகரம் தென்னிய இரயில் போக்குவரத்தின் ஒரு முக்கிய இரயில் சந்திப்பை வழங்குகிறது. இது மதுரை-திருச்சிராப்பள்ளி-திண்டுக்கல்-கொல்லம் வழியில் அமைகிறது. இது சென்னை, பெங்களூர், திருச்சி, பாலக்காடு மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களுடன் நன்கு இணைந்துள்ளது.








தமிழ்நாடு     மதுரை     சிறு தொழிற்சாலைகள் தயாரிப்பு மேம்பாட்டு அமைப்பு