தமிழ்நாடு     சென்னை     ஐயநல்லூர் கிராமக்


ஒரு குழுமம் என்பது ஒரே மாதிரியான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் மற்றும் பொதுவான வாய்ப்புகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்கும் பிரிவுகளின் ஒரு புவியியல் செறிவு (நகரம்/சிறுநகரம்/சில அருகாமையிலுள்ள கிராமங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பகுதிகள்) என வரையறுக்கப்படுகிறது. ஒரு கைவினைஞர் குழுமம் என்பது கைவினை/கைத்தறி பொருட்களை தயாரிக்கும் புவியியல் செறிவான (பெரும்பாலும் கிராமங்கள்/சிறுநகரப் பகுதிகளில்) குடும்பப் பகுதிகள் ஆகும். ஒரு பொதுவான குழுமத்தில், அப்படிப்பட்ட உற்பத்தியாளர்கள் அடிக்கடி ஒரு பாரம்பரிய சமுதாயத்தை சார்ந்திருப்பார்கள், அவர்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட காலம் நிறுவப்பட்ட பொருட்களை தயாரிப்பார்கள். உண்மையில், பல கைவினைஞர் குழுமங்கள் நூற்றாண்டு காலமாக கைவினைஞர்களை கொண்டுள்ளது.

 

ஐயநல்லூர் கிராமக் குழுமம் பற்றி:-

 

ஐயநல்லூர் கிராமக் குழுமம் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தின் கீழ் அமைகிறது.

 

ஐயநல்லூர் கிராமக் குழுமத்தால் 205க்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களை உருவாக்க முடியும் & 7 SHG-கள் பலமான வேலைக் குழுவை ஆதரிக்கின்றது. ஆள் திரட்டுதல் நாளுக்கு நாள் வேகத்தை பெறுகிறது.

 

 நகைக்கலை:-

 

தமிழ்நாட்டில், நகைக்கலை ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது மேலும் அனைவரும் ஏதாவது ஒரு நகையை அணிந்து காணப்படுகின்றனர். இந்தப் பகுதியின் பண்டைய நகை உருவாக்கும் பாரம்பரியம் ஒரு அதிக அளவிலான உயர்வு மற்றும் வேலைத்திரனை சொல்கிறது. தங்கம் மங்களகரமானதாகவும் உடலுக்கு நல்லதாகவும் கருதப்படுகிறது.இது நகையாக பாதத்தை தவிர உடலின் அனைத்து பாகங்களுக்காகவும் தயாரிக்கப்படுகிறது, கடவுள்கள் மற்றும் அரசர்கள் மட்டுமே பாதங்களில் நகைகளை அணிவார்கள். பாரம்பரிய திருமண நகை, கற்களால் பதிக்கப்பட்டிருக்கும், தலைசாமான் என அறியப்படும் இது, தலை மற்றும் முடியில் தேவதாசிகள்/கோயில் நடனக்கலைஞர்களால் அணியப்படும். இவர்கள் கடவுளை திருமணம் செய்தவர்களாக கருதப்படுகிறது மேலும் இந்த நகை கோயில் நகை என அழைக்கப்படுகிறது.

சூரியன் மற்றும் சந்திரன் போன்ற வடிவங்களிலுள்ள ஆபரணங்கள் மாணிக்கங்களால் பதிக்கப்பட்டு, மரகதங்கள் மற்றும் வெட்டப்படாத வைங்களால் தூவப்பட்டு இருக்கும். இவைகள் முடிகளுக்கு இடையே நெற்றியுடன் அணியப்படும். முடி அலங்காரத்திற்கு பின்னால் அணியப்படும் நகையான ராக்கூடி அல்லது நாகர் ஒரு கல் பூசப்பட்ட்து, இது ஒரு ஐந்து தல நாகத்துடன் நடுவில் ஒரு அன்னத்துடன் உள்ள வடிவத்தில் இருக்கும். இதற்கு கீழே, கற்களால் பதிக்கப்பட்ட (மாணிக்கங்கள் மற்றும் வைரங்கள்), முடித்துண்டு அல்லது ஜடாநாகம் பின்னப்பட்ட முடியின் வடித்துடன் ஒரு முறுக்கப்பட்ட வடிவத்தில் தொடர்ந்து இருக்கும்.

கிராமப்புற பெண்கள் ஆறு காதணிகளால் செய்யப்பட்ட பாம்படம் என அழைக்கப்படும் கனமான தங்க காது ஆபரணங்களை அணிகின்றனர். காது தோடுகள் கடுக்கண் (ஒற்றைக் கல்), கம்மல் (மாணிக்கங்கள் அல்லது வைரங்களுடன் உள்ள தாமரை வடிவத்திலானவை), ஜிமிக்கி (மணி வடிவ காது தொங்கல்கள்), லோலாக்கு (ஏதாவது வடித்திலுள்ள காது தொங்கல்கள்) அல்லது மாட்டல், இது தங்கம் அல்லது முத்துக்களால் செய்யப்பட்டு, காதணியுடன் மாட்டப்பட்டு காதுக்கு மேல் முடியுடன் இணைக்கப்படும். மூக்கிற்கான ஆபரணங்கள் ஒற்றைக் கல் மூக்குப்பொட்டு அல்லது பேசரி மற்றும் எட்டு வைரங்களுடன் பதிப்பட்ட முத்து அல்லது அன்ன வடிவம் கொண்ட ஹம்ச பேசரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது, இவை அனைத்தும் மூக்கின் நடுப்பகுதியின் நிறுத்தப்பட்டு அணியப்படும்.

வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் எலும்பு நகைகள் வெளிநாட்டில், கல்லூரிக்கு செல்பவர்களிடம் ஒரு வேண்டுகோளை நிலைக்க செய்கிறது. நகை வெவ்வேறு சாயல்களிலும் கலவைகளிலும் வண்ணமிடப்பட்டுள்ளன. இது வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களை வசீகரிக்கிறது. "விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொம்புகளில் செய்யப்பட்ட எங்களின் பல்வேறு வகையான நிறமுள்ள நகைகளால் நாங்கள் நல்ல பலன்களை பெற்றோம். என்ன வகையான நகையை நாங்கள் செய்தாலும், நாங்கள் எளிதாக அதை வெவ்வேறு திண்மைகளில் வண்ணமிட்டு விடுகிறோம். வெவ்வேறு வகையான நிறக் கலவைகள் சர்வதேச வாடிக்கையாளர்களை கவர்கிறது. அவர்கள் இந்த நகைளை தங்களின் ஆடைக்கு பொருத்தமாக வாங்கிறார்கள்." என ஒரு எலும்பு நகை தயாரிப்பாளரான மனோஜ் கூறுகிறார்.

 

மூலப்பொருட்கள்:-

 

 நகைப் பொருட்கலை தயாரிப்பதில் பயன்படும் அடிப்படை மூலப்பொருட்களாவன-

அடிப்படை பொருட்கள்:- சிப்பியிலிருந்து கிடைக்கும் பொருட்கள், அரக்கு, இரும்பு அல்லது தாமிர வளையங்கள், வெள்ளி பித்தளை, ஆதார உலோகம், மலர் நகை, வெள்ளி, பித்தளை, தங்கள், கார் அல்லது நவசாகர், நிலக்கரி, மெழுகு, மண்ணெண்ணை விளக்கு, அலுமிய உலோகங்கள், மர அச்சு வார்ப்புகள், சுத்தியல், மரச் சம்மட்டிகள், உளி, ஸ்க்ராப்பர்(தேவையற்றதை நீக்கும் கருவி), வரைகோல், கம்பி கத்தரிகள், இரும்பு & வெண்கல மை வெளியேற்ற குமிழ்கள், பவழம் முத்துக்கள் பட்டு நூல், குமிழ்கள், பூச்சுகள்.

அலங்காரப் பொருட்கள்: - கண்ணாடி குமிழ்கள், உலோக குமிழ்கள் மற்றும் கறுப்பு குமிழ்கள்.

நிறமூட்டும் பொருட்கள்: - சோடியம் சல்பேட், ஆலம் உப்பு, கந்தக அமிலம், நிறங்கள், பசை, மெருகெண்ணெய்(வார்னிஷ்), எனாமல் நிறங்கள்.

 

செயல்முறை:-

 

உடனடி கண்டுபிடிப்பு கீழ்கண்ட படிகளை உள்ளடக்கி நகை உற்பத்திக்கான ஒரு செயல்முறையை சிந்திக்கிறது:

(a) கணிப்பொறியால் உருவாக்கப்பட்ட படத்திலிருந்து ஒரு ஒளிப்படத் தகடை உருவாக்குதல்;

(b) ஒரு கடினமான கரைபொருளால் கட்டப்பட்ட ஒரு ஃபோட்டோபாலிமெரைசபிள் ரெசின் மேல் ஒளித்தகடை மறைக்கவும்;

(c) மறைக்கப்படாத ரெசினை புற ஊதாக்கதிரால் ஒளிவீசச் செய்யவும்;

(d) நீர் போன்ற ஒரு கழுவும் பொருளை பயன்படுத்தி, பாலிமெரசை செய்யப்படாத ரெசினை ஃபோட்டோபாலிமரிலிருந்து நீக்கவும், இது பொருளின் வார்ப்பு போன்ற ஒரு நேர்மறை முப்பரிமாணம் கிடைக்கும்;

(e) பெறப்பட்ட செதுக்கப்பட்ட ரெசினை ஒரு கொள்கலனில் வைத்து, வெட்டப்படும் ரெசினை கொள்கலனில் ஊற்றவும். இதனால் நகைப் பொருளின் ஒரு எதிர்மறை அச்சைத் தாங்கிய அடைப்பான் உருவாகும்;

(f) வெட்டப்பட்ட ரெசின் அடைப்பானை ஒரு காலியான உறையைக் கொண்டுள்ள ஒரு நகைப் பொருள் அச்சிற்குள் நுழைக்கவும். இது அடைப்பானை பெற்றுக் கொண்டு ஒரு முழுமையான நகை அச்சை தரும்;

(g) பிளாஸ்டிக்கால் அச்சை நிரப்பவும், இது நகையின் பிளாஸ்டிக்க அச்சை உருவாக்கும்;

(h) ஒரு தனி நகைப் பொருளை உருவாக்க ஒரு "இறுதி மெழுகு" வார்ப்பு செயல்முறையில் பிளாஸ்டிக் மாதிரியை பயன்படுத்துதல்.

 

தொழில்நுட்பத் திறன்கள்:-

 

வலை போன்ற அமைப்பு ஒரு தனிப்பட்ட நயத்தை உருவாக்க, உலோகத்தில், பள்ளம் மற்றும் மேடுகளை உருவாக்கும் ஒரு செய்முறையாகும். ஸ்டெர்லிங் வெள்ளி அல்லது ரெடிகுலேசன் வெள்ளி அதன் உருகுநிலைக்கு கீழ் பலமுறை சூடுபடுத்தப்பட்டு, பின் இறுதியாக அதிக வெப்பம் அளிக்கப்படுகிறது. மெல்லிய வெள்ளியை பரப்பில் நகரவும் முறுக்கவும் செய்கிறது. இந்த செயல்முறையில் வெள்ளி அல்லது தங்கத்தை வெப்பத்தால் பரப்பை தொட செய்வதன் மூலம் உருக்கி இணைக்கப்படுகிறது. பற்றாசு(சால்டரிங்) பயன்படுத்தப்படுவதில்லை. மோக்யூம்-கேன் ஜப்பனிய மொழியில் மோக்யூம்-கேன் என்றால் மரத்தூள் உலோகம் எனப் பொருள்படும். ஸ்டெர்லிங் வெள்ளி மற்றும் தாமிரம் அல்லது ஸ்டெர்லிங் வெள்ளி மற்றும் 22 காரட் தங்கத்தின் மாற்று அடுக்குகள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. பரப்பை மேலே அடித்தல் அல்லது செதுக்குதல் மூலம் உருமாதிரிகள் தயாரிக்கப்பட்டு பிறகு உருமாதிரியை வெளிப்படுத்த பளப்பாக்கப்படுகிறது. ஒழுங்கற்ற உருமாதிரி அடுக்குகள் ஒரு திட உறுதியான வெள்ளி பூச்சை பெற்றிருக்கும். எந்த இரண்டு பகுதிகளும் ஒரே மாதிரியான டைட்டானியம் நிறத்தை பெற்றிருக்காது. குறிப்பிட்ட ஒரு மின்னழுத்த அளவில் உலோகத்தின் மீது நேர்மின்னூட்டத்தை பாய்ச்சும்போது ஒரு ஆக்சைடு அடுக்கு உருவாகி இதன் மூலம் டைட்டானியம் மீது நிறம் உருவாக்கப்படும். இந்த அடுக்குகள் ஒளியை வெவ்வேறு விதமாக விலக்குகிறது - வாபவில்லின் நிறங்களை காணும் ஒரு விளைவை உண்டாக்குகிறது. இது ஒரு வளமான நிறமுள்ள களிம்பு படிதல் முறையாகும். ஷிபுய்ச்சி, இது மெல்லிய வெள்ளி மற்றும் தாமிரத்தை கொண்ட ஒரு உலோகக் கலவையாகும். இந்த உலோகக் கலவை சீனாவில் ஹான் டினாஸ்டியின் போது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது. கோரு, இந்த வடிவமைப்புகள் பாரம்பரிய வளர்ச்சி மற்றும் வாழ்க்கையின் அடையாளமான மோரியிலிருந்து தூண்டப்பட்டதாகும். ஒரு இளம் பன்னத்தை சித்தரிக்கிறது. இது அமைதி, இணக்கம் மற்றும் புது தொடக்கங்களை குறிப்பிடுகிறது.

 

எப்படி சென்றடைவது:-

 

சென்னை இந்திய இரயில் போக்குவரத்தின் ஒரு பிரிவான தென்னிந்திய இரயில் போக்குவரத்தின் தலைமையிடமாகும். சென்னை அதிவேக மற்றும் துரித புகைவண்டிகள் மூலம் பல நகரங்கள் மற்றும் சிறுநகரங்களை இணைக்கிறது. நகரம் இரண்டு முக்கிய இரயில் நிலையங்களை கொண்டுள்ளது. சென்னை மத்திய இரயில் நிலையம் வடக்கு மற்றும் மேற்கு இந்திய பகுதிகளை இணைக்கிறது, மேலும் எழும்பூர் இரயில் நிலையம் தென்னிய பகுதிகளை இணைக்கிறது. சென்னை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட  MRTS (மாபெரும் அதிவிரைவு போக்குவரத்து அமைப்பு) எனப்படும் ஒரு உள்ளூர் மின் இரயில் போக்குவரத்தை  பெற்றுள்ளது, இது நகரத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கின்றது. சென்னை நெடுஞ்சாலை மற்றும் சாலைகளின் ஒரு கட்டமைப்பின் மூலம் இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களோடும் நன்கு இணைந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களுக்காக, ஜவஹர்லால் நேரு சாலை, கோயம்பேடு என்ற இடத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து பெரும்பான்மையான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். சென்னையிலிருந்து மாநிலங்களுக்கிடையேயான பேருந்துகள்








தமிழ்நாடு     சென்னை     முழுமையான பெண்கள் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம்