ஒரு குழுமம் என்பது ஒரே மாதிரியான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் மற்றும் பொதுவான வாய்ப்புகள் மற்றும் பிரச்சினைகளை சந்திக்கும் பிரிவுகளின் ஒரு புவியியல் செறிவு (நகரம்/சிறுநகரம்/சில அருகாமையிலுள்ள கிராமங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்துள்ள பகுதிகள்) என வரையறுக்கப்படுகிறது. ஒரு கைவினைஞர் குழுமம் என்பது கைவினை/கைத்தறி பொருட்களை தயாரிக்கும் புவியியல் செறிவான (பெரும்பாலும் கிராமங்கள்/சிறுநகரப் பகுதிகளில்) குடும்பப் பகுதிகள் ஆகும். ஒரு பொதுவான குழுமத்தில், அப்படிப்பட்ட உற்பத்தியாளர்கள் அடிக்கடி ஒரு பாரம்பரிய சமுதாயத்தை சார்ந்திருப்பார்கள், அவர்கள் தலைமுறை தலைமுறையாக நீண்ட காலம் நிறுவப்பட்ட பொருட்களை தயாரிப்பார்கள். உண்மையில், பல கைவினைஞர் குழுமங்கள் நூற்றாண்டு காலமாக கைவினைஞர்களை கொண்டுள்ளது. புதுச்சேரி குழுமம் பற்றி:- புதுச்சேரி குழுமம் தமிழ்நாடு மாநிலத்தில் பாண்டிச்சேரி மாவட்டத்தின் கீழ் அமைகிறது. புதுச்சேரி குழுமத்தால் 550க்கும் மேற்பட்ட கைவினைப்பொருட்களை உருவாக்க முடியும் & 23 SHG-கள் பலமான வேலைக் குழுவை ஆதரிக்கின்றது. ஆள் திரட்டுதல் நாளுக்கு நாள் வேகத்தை பெறுகிறது. களிமண் கைவினைப்பொருள்:- தமிழ்நாட்டின் களிமண் கைவினைப்பொருள்கள், நவீன மற்றும் நகர மக்களின் மனதை கவரும் விதத்தில் பயனுள்ள பொருட்கள் முதல் அலங்காரப் பொருட்கள் வரையான பலவித பொருட்களுடன் செம்பழுப்பு மட்பாண்டங்கள் செய்வதற்காக புகழ்பெற்றதாகும். தமிழ்நாட்டின் களிமண் கைவினை கலையின் முக்கிய மையங்கள் சென்னை, காஞ்சிபுரம், ஆற்காடு மாவட்டப் பகுதிகள் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வேலூர் மிகச்சிறந்த கலை அழகுடன் உருவாக்கப்படும் கருப்பு மற்றும் சிவப்பு மட்கலங்களால் புகழை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் ஒரு நன்கு அறியப்பட்ட களிமண் பொம்மை செய்யும் மையமாகும். மதுரையின் உசிலம்பட்டில் உள்ள கருப்பு பானை செய்தல் ஒரு பழங்கால கைவினை கலையாகும். இந்த வகை கலைப்பொருட்கள் ஒரு சிறப்பான மஞ்சள் பொருளால் வண்ணம் தீட்டப்படுகின்றன. தென்னாற்காட்டில் உள்ள பண்ருட்டி, கடவுள்களின் பெரிய உருவங்கள் முதல் பொம்மைகள் மற்றும் பல பொருட்களை செய்வதற்காக நன்கு அறியப்பட்டதாகும். இந்த குறிப்பிட்ட வகை மண்பாண்டங்களின் தனிச்சிறப்பானது, அதிக கலைத்திறனுடைய வடிவங்களை உருவாக்குதல், கிளர்ச்சியூட்டும் நிறங்கள் மற்றும் சிறந்த ஒப்பனையை பயன்படுத்துத்தல் ஆகியவற்றில் அமைந்துள்ளது. கைவினைஞர்கள் நவீன உடைகள் மற்றும் ஊசலாடும் தலைகள் ஆகியவற்றின் மூலம் பொம்மைகளுக்கு நவீன அழகை தருகின்றனர். 'குண்டு செட்டியார்' என அழைக்கப்படும் ஒரு சிறப்பு வகை பொம்மை நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என நம்பப்படுகின்றது மேலும் இது உள்ளூர் சந்தைகளில் பெருமளவில் கிடைக்கின்றது. பொம்மைகள் சமய பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் களிமண்ணில் செய்யப்பட்ட பொம்மைகள் அல்லது கைப்பாவைகள் நவராத்திரி(தசரா) விழாவின் போது பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் களிமண் கைவினைப் பொருட்கள் பலவிதமான வகைகளில் களிமண் பொருட்களை பெற்றுள்ளன மேலும் கைவினைஞர்களின் திறமையான கையாளும் தன்மை களிமண் பொருட்களின் மீது ஒரு வித்தியாசமான் அணுகுமுறையை அளிக்கிறது.மிகப் பரவலான களிமண் ஊதுகுழல் கூட தன் நேர்த்தியான வடிவம் மற்றும் தன் அடர்நீல அல்லது பச்சை வார்னிஷ் மூலமாக ஒரு கவனிக்கப்படும் பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களைத் தவிர, இந்த இடங்களில் உள்ள கைவினைஞர்கள் நீர் ஜாடிகள், தேநீர் மற்றும் உணவு பாத்திரங்கள், சாம்பல் தட்டுகள், அழகாக அலங்காரப்படுத்தப்பட்ட பூச்சாடிகள் மற்றும் அலங்கார விலங்கு உருவங்கள் மற்றும் காகித பளுக்கள் போன்ற மேஜை உபயோகப் பொருட்களை தயாரிப்பதில் நிபுணர்களாய் உள்ளனர். களிமண் கைவினைப்பொருளின் மூலப்பொருள்:- அடிப்படை பொருள்: சிவப்பு களிமண் (பாரம்பரியமானது), சீனாக் களிமண், பந்து களிமண், பிளாஸ்டிக் களிமண், கண்ணாடி, பசை. அலங்காரப் பொருள்: களிம்ம், பளிங்குகல், சலவைக்கல் அல்லது கால்சைட், துத்தநாக ஆக்சைடு, பேரியம் கார்பனேட். நிறமூட்டும் பொருள்: நீலம் & கருப்பு (தாமிர அல்லது கோபால்ட் ஆக்சைடு), பழுப்பு (இரும்பு ஆக்சைடு), இளஞ்சிவப்பு அல்லது ஊதா (மாங்கனீசு ஆக்சைடு), பச்சை (தாமிர & குரோமிய ஆக்சைடு). களிமண்ணின் செயல்முறை:- களிமண் மற்றும் வேதிப்பொருட்கள் ஒரு அடர்த்தியான பிசுபிசுப்பான கலவையை தயாரிக்க ஒன்றாக கலக்கப்படுகின்றது. இந்த கலவை அச்சில் ஊற்றப்பட்டு, எண்ணற்ற வடிவங்கள் உருவாக்கப்படுகின்றது. அது ஒரு குழந்தை கிருஷ்ணர் ஒரு வெண்ணை உருண்டையை திருடுவதாகவோ அல்லது ஒரு சிரிக்கும் புத்தராகவோ அல்லது எப்போதும் விரும்பப்படும் கணேசராகவோ இருக்கலாம். மண் உருவங்கள் பிரகாசமான சாயல்களில் வண்ணம் தீட்டப்பட்டு, சில மணி நேரம் ஒரு சூளையில் சுடப்படுகின்றன; முழுமையடைந்த தயாரிப்புகள் நாடு முழுவதும் குறிப்பாக நவராத்திரி சமயங்களில் பயணம் செய்கின்றன. தமிழ்நாட்டில், வீணான காகித கூழ் உள்ளூர் களிமண்ணுடன் ஒரு மென்மையான பொருளாக அடிக்கப்படுகின்றது. பிறகு இது மெல்லிய நெகிழும் தாள்களாக உருட்டப்படுகின்றது. வாழ்க்கை அளவிலான பொம்மைகள்; மஹாபாரதம் மற்றும் இராமயணத்திலிருந்து நிகழ்ச்சிகள், ஆண், பெண் கடவுள்களின் உருவங்கள் ஆகியவை தமிழ்நாட்டில் காகிதக் கூழால் தயாரிக்கப்படும் பொருள்களில் சிலவற்றாகும். காகிதக் கூழை வார்ப்பு எடுத்த பிறகு, கலைப்பொருட்கள் நீர்த்த காகிதக் கூழ் மற்றும் வெள்ளை களிமண்ணில் முக்கியெடுத்த பிறகு, எண்ணெய் அல்லது நீர் நிறங்களால் வண்ணந் தீட்டப்படுகின்றன. களிமண்ணின் தொழில்நுட்பத்திறன்கள்:- தமிழ்நாட்டின் கலைப் பொருட்கள் களிமண் பொம்மைகளை செய்யும் ஒரு பாரம்பரியத்தை பெற்றுள்ளது. இந்த களிமண் பொருட்களை உருவாக்குதலுக்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது மேலும் இந்த பொம்மைகளிஅ உருவாக்கும்போது ஒரு சில படிகள் பின்பற்றப்படுகின்றன. முதல் படிநிலையில், பாரீஸ் சாந்து மரவள்ளி கிழங்கு தூளுடன் கலக்கப்பட்டு, ஒரு பசை உருவாக்கப்பட்டு அது படலங்களுக்காக உருட்டப்படக் கூடிய நிலை வரும் வரை காய வைக்கப்படுகின்றது. பிறகு இந்த பசை அச்சுகளாக மாற்றப்படுகின்றன. பாறைக் களிமண் முறையாக ஈரப்பதம் சேர்க்கப்பட்ட பிறகு, பயன்படுத்தப்படுகின்றது. பிறகு இது அச்சிற்குள் அழுத்தப்பட்டு, பிரெஞ்சு சுண்ணத்தூள் தூவப்படுகின்றது, இதை எளிதாக நீக்கலாம். இந்த வார்ப்பு தீயில் காட்டப்பட்டு, இறுதிகட்ட அச்சு தயாரிக்கப்படுகின்றது. வார்ப்பை தயாரித்த பிறகு, கைவினைஞர்கள் தன் விருப்பங்களுக்கேற்ப பல்வேறு பொருட்களுக்கு வடிவத்தை அளிக்கின்றது. பின் இந்த பொருட்கள் பெண்களால் வண்ணம் தீட்டப்படுகின்றன. கல் செதுக்குதல்:- கிரானைட் தமிழ்நாட்டில் எளிதாக கிடைக்கின்றது மேலும் பல கோயில்கள் இந்த கல்லினால் செதுக்கப்பட்டுள்ளன. உயர்நிலை திறன் மற்றும் கைநேர்த்தியை காண்பிக்கும் பல்லவர்களின் கல் செதுக்குதல்கள் 6ஆம் நூற்றாண்டில் உருவானது. மேலும் மாமல்லபுரத்தின் பாறை குடைவு செதுக்குதல்கள், கல் இரதங்கள்/தேர்கள் மற்றும் கல் கடற்கரை கோயில்கள் இந்த செதுக்குதல்களின் பகுதியாகும். கிரானைட் படங்கள் நிலையான புனித உருவச்சிலைகளின் கட்டுமானத்திற்கு மிகவும் அவசியமானதாக இருந்து வருகின்றன. மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள கைவினைஞர்கள் பெரிய தூண்கள் மற்றும் சிறிய உருவச்சிலைகளை உருவாக்க பெரிய கிரானைட் பாளங்களை செதுக்குகின்றனர். கல் செதுக்குதல் திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை மற்றும் வட ஆற்காடு மாவட்டங்கள் போன்ற தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் நடக்கின்றன. சிற்பிகள் விஷ்வகர்மா அல்லது கம்மாளர் சமுதாயத்தை சார்ந்துள்ளார்கள். கல் செதுக்குதலின் மூலப்பொருட்கள்:- அடிப்படை பொருட்கள் : சஜ்ஜார் பாதர், பாசி மாணிக்கக் கல், அகேட் ஆக்சைடுகள்.அடிப்படை பொருட்கள் : வெள்ளை பளிங்குக் கல், மணற்பாறை, நிறங்கள், அரம், இரம்பம், உளி, தேய்ப்பான், சுத்தியல். அடிப்படை பொருட்கள் : பச்சைக் கல், முல்தானி மிட்டி, கல் பலகை, எண்ணெய், துணி.அலங்காரப் பொருட்கள் : அழகான கண்ணாடிகள், பளபளக்கும் இலைகள், உப்புத்தாள். நிறமூட்டும் பொருட்கள் : நீர் நிறங்கள்.அடிப்படை பொருட்கள் : சவரக் கல், மணற்பாறை, கடின கற்கள், கிரானைட், சிவப்பு மணற்பாறை. அடிப்படை பொருட்கள் : பலவகை கற்கள், அரம், இரம்பம், உளி, தேய்ப்பான், சுத்தியல். நிறமூட்டும் பொருட்கள் : நிறங்கள் கறுப்பு, இளஞ்சிவப்பு, பழுப்பு.அடிப்படை பொருட்கள் : கல், உளிகள், சுத்தியல்.அடிப்படை பொருட்கள் : கல், நிறங்கள், தேய்ப்பான், உப்புத்தாள், அரம், இரம்பம், உளி, சுத்தியல். கல் செதுக்குதலின் செயல்முறை:- சிற்ப சாஸ்திரங்கள் அல்லது கலை மீதான ஆய்வுக் கட்டுரைகள் சிற்பக்கலை, கல்லின் தரம், அதன் முதிர்வுத் தன்மை, கட்டமைப்பு, நிறம் மற்றும் பலவற்றின் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் அளவீடுகளை விளக்குகின்றது. சிற்பியால் பயன்படுத்தப்படும் கல் கடினமாக இருக்கும் எனவே அது எளிதாக தன் வடிவத்தை இழக்காது அல்லது எதிர்பாராமல் உடையாது. கல்லில் எந்தவித குறைபாடுகள் அல்லது களங்கங்கள் (கறை), ரேகை (ஒட்டு) அல்லது பிந்து (சிறுபுள்ளி) ஆகியவை இருக்கக் கூடாது. சிற்பிகளால் பயன்படுத்தப்படும் கருவிகள் பல்வேறு அளவுகளில் மென்மையான எஃகால் தயாரிக்கப்பட்டவை. கருவியால் ஏற்படு அதிவினால் ஏற்படும் விரிசல்களிலிருந்து கல்லை பாதுகாக்க, படம் உட்காரும் நிலையில் இருந்தாலும் நிற்கும் நிலையில் இருந்தாலும், எப்போதும் செதுக்கும்போது தரையில் சமதளமாக வைக்கப்பட வேண்டும். உருவம் செதுக்கப்பட்ட பிறகு, நயனோன்மிலன் எனப்படும் ஒரு விழா நடத்தப்பட்டு, உருவம் பார்வை, உயிர் மற்றும் சுவாசம் ஆகிஅவற்றை பெற்று ஒரு உயிருள்ளதாக மாறுகிறது. பிறகு அது முறைப்படி கர்ப்பகிரகம் அல்லது கோயிலின் கருவறையில் வைக்கப்படுகின்றது. கல் செதுக்குதலின் தொழில்நுட்பத்திறன்கள்:- கல்லின் தரம், அதன் முதிர்வுத்தன்மை, கட்டமைப்பு, நிறம் மற்றும் பல. சிற்பியால் பயன்படுத்தப்படும் கல் கடினமாக இருக்கும் எனவே அது எளிதாக தன் வடிவத்தை இழக்காது அல்லது எதிர்பாராமல் உடையாது. கல்லில் எந்தவித குறைபாடுகள் அல்லது களங்கங்கள் (கறை), ரேகை (ஒட்டு) அல்லது பிந்து (சிறுபுள்ளி) ஆகியவை இருக்கக் கூடாது. சிற்பிகளால் பயன்படுத்தப்படும் கருவிகள் பல்வேறு அளவுகளில் மென்மையான எஃகால் தயாரிக்கப்பட்டவை. கருவியால் ஏற்படு அதிவினால் ஏற்படும் விரிசல்களிலிருந்து கல்லை பாதுகாக்க, படம் உட்காரும் நிலையில் இருந்தாலும் நிற்கும் நிலையில் இருந்தாலும், எப்போதும் செதுக்கும்போது தரையில் சமதளமாக வைக்கப்பட வேண்டும். புல், இலை, கோரைப்புல், நார்ப்பொருள்:- பனைமர நாரிலிருந்து செய்யப்படும், பலவேறு வடிவத்திலான கூடைகள் மற்றும் பேரீச்ச மர தண்டிலிருந்து செய்யப்படும் பாய்கள் ஆகியவை உள்ளடக்கிய பல பொருட்கள் தமிழ்நாட்டில், வட மற்றும் தென் ஆற்காடு, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் செய்யப்படுகிறது. தென்னை மர இலைகள் கீற்றுகளிலிருந்து பிரிக்கப்பட்டு அவற்றின் மீது செல்லும் ஒரு கீற்றை சுற்றுவதன் மூலம் அவ்விலைகள் ஒன்றாக்கப்படுகின்றன. பின் அடுக்குகளை இடைவெளிகளில் இணைப்பதற்கு ஒரு மெல்லிய இலை கீற்றால் அவை ஒரு நாடா போல மடிக்கவும் இறுக்கவும்படுகின்றன. எனவே கைப்பெட்டிகள், பெட்டிகள், பைகள், கூடைகள், திரைகள், பாய்கள், குவளை பிடிப்புகள், ஜாடிகள், தொப்பிகள், அழகான சல்லடைகள், கை விசிறிகள், சதுர பாய்கள் மற்றும் அணிகலன் பெட்டிகள் போன்ற தயாரிப்புகள் சிறந்த வடிவமைப்பில் இனிமையான நிறங்களுடன் ஒரு சீரான மற்றும் நயமான முறையில் கிடைக்கின்றன. சணல் நாரின் மூலப்பொருட்கள் :- தமிழ்நாட்டின் கிராமங்கள் பனை மரங்கள், தென்னை, பேரீச்சம் போன்ற மரங்களால் நிறைந்துள்ளன. பனை கூடைகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளுக்கான மூலப்பொருளின் முக்கிய மூலமாகும். மூங்கில், பிரம்பு, புல்கள், நார்கள் மற்றும் கோரைப்புல் போன்ற மற்ற மூலப்பொருட்களும் கூடைகள், கூரை, கயிறுகள், பாய்கள் மற்றும் பல பொருட்களை தயாரிக்கப் பயன்படுகின்றன. சணல் நாரின் செயல்முறை:- சணல் நார் சணல் தாவரத்தின் தண்டு மற்றும் பட்டையிலிருந்து(வெளிப்புறத் தோல்) கிடைக்கின்றது. நார்கள் நீரில் நனைத்து முறையின் (ரெட்டிங்) மூலம் முதலில் பிரித்தெடுக்கப்படுகிறது. ரெட்டிங் முறை சணல் தண்டுகளை ஒன்றாக கட்டுதல் மற்றும் அவற்றை ஓடும் நீரில் அடியில் மூழ்க வைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இரண்டு வகை ரெட்டிங்கள் முறைகள் உள்ளன: தண்டு மற்றும் பட்டை. ரெட்டிங் முறைக்கு பிறகு, உரிக்கும் முறை தொடங்குகிறது. பொதுவாக பெண்களும் சிறுவர்களும் இந்த வேலையை செய்வார்கள். உரிக்கும் முறையில், நாரில்லாத பொருட்கள் ஒதுக்கப்படுகின்றன, பிறகு பணியாளர்கள் அதை இடித்து நார்களை சணல் தண்டிற்குள்ளிருந்து எடுப்பார்கள் சணல் பைகள் அழகுப் பைகள் & ஊக்குவிப்பு பைகள் செய்ய பயன்படுத்தப்படுகின்றது. சணலில் சூழ்நிலை-நட்பு பண்பு வர்த்தக பரிசளிப்பு சிறந்ததாக அதை ஆக்குகிறது. சணல் தரை விரிப்புகள் நெய்யப்பட்டும், முடிச்சுகளுடனும் மடிப்புகளுடனும் இருக்கும். சணல் பாய்கள் மற்றும் தரைவிரிப்புகள் 5/6 மீட்டர் அகலத்துடன் தொடர்ச்சியான நீளத்துடன் இருக்கும். இவை தென்னிந்தியப் பகுதிகளில் திடமான மற்றும் கட்டற்ற நிறங்களில், பவுகஸ், பனாமா, ஹெரிங்போன் போன்ற வெவ்வேறு வித நெசவுப்பாணிகளில் எளிதாக நெய்யப்படுகின்றன. சணல் பாய்கள் & தரைவிரிப்புகள் இந்தியாவின் கேராளாவில் விசைத்தறி & கைத்தறி ஆகிய இரண்டின் மூலமாக பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய சாட்ரான்ஜி பாய் வீட்டு அலங்கார அமைப்பில் மிகப் புகழ்பெற்றதாக மாறியுள்ளது. நெய்யப்படாத மற்றும் கலவையான சணல் அடித்தாள், தார்ச்சீலை மேலும் பலவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது. சணல் ஒரு வீட்டு நெசவுப் பொருளாக பல பலன்களை கொண்டுள்ளது. இது ஒரு உறுதியான, நீண்டகாலம் உழைக்கூடிய, நிறமுள்ள மற்றும் ஒளிவேக நாராகும். இதன் புற ஊதாக் கதிர் பாதுகாப்பு, ஒலி மற்றும் வெப்ப தடுப்பு, குறைவான வெப்ப பரவல் மற்றும் நிலையற்ற பண்புகள் ஆகியவை இதை வீட்டு அலங்காரத்திற்கு ஒரு சிறந்த தேர்வாக ஆக்குகிறது. மேலும், சணல் நார்களால் தயாரிக்கப்பட்ட துணிவகைகள் கார்பன் டை ஆக்சைடுக்கு நடுநிலையானவை மற்றும் பொதுவாக சிதையக் கூடியவை. இந்த பண்புகள் சணல் அதிக செயல்பாடுடைய தொழிற்நுட்ப நெசவகங்களில் பயன்படுவதற்கான காரணமாகும். அதுமட்டுமில்லாமல், சணல் 4-6 மாதங்களில் பெருமளவு செல்லுலோஸ் உடன் விளைகின்றது, இது உலகின் பெரும்பான்மையான மரத் தேவைகளை பூர்த்தி செய்கின்றது. சணல் மற்வைகளுக்கிடையே முக்கிய பயிராகும் மேலும் இதன் மூலம் தொழில்மயமாக்குதல் மூலம் காட்டை அழித்தலை தடுக்க முடியும். எனவே, சணல் மிகவும் சூழலுக்கு உகந்த நாராகும், விதை முதல் காலாவதியான நார் வரை பயன்படும். காலாவதியான நார்களை ஒரு முறைக்கு மேல் மறுசுழற்சி செய்ய முடியும். சணல் நாரின் தொழில்நுட்பத் திறன்கள்:- செய்முறை படிப்பு தொழில்நுட்பத் திறனின் நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தவும், செயல்திறன்களை மேம்படுத்தவும் தொழிலாளரை தன் உற்பத்தி மற்றும் வருவாயை அதிகரிக்கச் செய்யவும் உதவுகிறது. எனவே அவரால் வாழ்வின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திச் செய்யவும், வறுமையின் பிடிகளிலிருந்து சரியான நேரத்திற்குள் வெளிவரவும் முடிகிறது. தோல் கைவினைப்பொருள்:- தோல் கலையின் கருத்து மனிதர்கள் தங்களது உணவிற்காக கொன்று கொண்டிருந்தபோது வந்தது. படிப்படியாக, அவர்கள் தோலின் பயன்பாட்டை உடை அணிதலுக்காக தோலை பயன்படுத்தும் முனைப்புடன் கண்டறிந்தனர். இந்தியாவில், தோல்பதனிடும் துறை "மோச்சிக்கள்" -ஆல் தலைமை வகிக்கப்படுகிறது, இவர்கள் தோல் பதனிடுதலுக்காக விலங்குகளின் தோலை இறந்த விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கின்றனர். முக்கியமாக இந்தியாவின் கிராமப்புற பகுதி மக்கள் பழமையான தோல் கலை, வடிவமைப்பு, உற்பத்தி ஆகிய்வற்றிக் ஈடுபட்டிருக்கிறார்கள். தோல் பதனிடுதல் விற்பனை கடந்த காலத்தில் தொடங்கப்பட்டது மேலும் இது இந்தியாவில் கி.மு. 3000 ஆண்டு வாக்கில் வளர்ச்சியடைந்தது. தோல் கலை மற்றும் தோல் பதனிடுதல் தொழிற்துறையின் முக்கிய விளைபொருள் காலணி ஆகும். தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி பெருமளவில் சித்திரத் தையல் வேலை செய்யப்பட்ட காலணிகளை தயாரிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க இடமாகும். உண்மையான மற்றும் சிறந்த நிறங்களுள்ள பதனிடப்பட்ட தோலில், சித்திரப் பூ வேலை அல்லது சித்திரத் தையல் வேலை அலங்காரங்களுடன் உள்ள தயாரிக்கப்பட்ட பாரம்பரிய தோல் 'செருப்புகள்' இங்கே அதிக விதங்களில் உள்ளன. "ஸ்லீப்பர்கள்" அல்லது "சப்பல்கள்" என அழைக்கப்படும் காலணிகள் தமிழ்நாட்டின் மிகவும் விரும்பத்தக்க மற்றும் கண்கவரும் காலணிகளில் ஒன்றாகும். சப்பல் அல்லது சாண்டல் வெப்ப காலநிலை மற்றும் பருவகால இடங்களில் பொருத்தமான மற்றொரு வகை காலணியாகும். தோல் கைவினைப்பொருளின் மூலப்பொருட்கள்:- தமிழ்நாட்டில் தோல் கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருள் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளின் தோல் ஆகும். தோல் கைவினைப் பொருட்களை தயாரிப்பதில் குறிப்பாக தோல் பொம்மைகளுக்கு விலங்குத் தோலை கழுவுதல், சுத்தம் செய்தல் மற்றும் மிகச்சிறந்த முழுமை மற்றும் கைத்திறனுடன் அதை அலங்கரித்தல் போன்ற ஒரே செயல்முறைகளே பின்பற்றப்படும். தோல் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டவுடன், சாயம் பூசுதல் மற்றும் ஓரக்கோடுகளை வரைதல் ஆகியவை செய்யப்படும். இந்த தோல் பொம்மைகளை செய்வதை தவிர, தமிழ்நாட்டின் கைவினைஞர்கள் விளக்குத் திரைகள், சுவர் திரைகள் போன்ற வீட்டு ஒப்பனைகளுக்காக பயன்படுத்தப்படும் தோல் பொருட்களை செய்கின்றனர். தோல் கைவினைப்பொருளின் செய்முறை:- பதனிடப்பட்ட தோல் மொத்த விலை சந்தையிலிருந்து வாங்கப்பட்டு இரண்டு நாட்கள் பெரிய பீப்பாய்களில் ஊறவைக்கப்படுகிறது. பிறகு கூடுதலான பதனிடுதல் பொருட்களை நீக்க அது நன்றாக கழுவப்படுகின்றது. முழுதாக ஈரமாக இருக்கும்போது அது தரையில் வைத்து நீட்டப்பட்டு காய விடப்படுகின்றது. இந்த செயல்முறைக்கு சிறிது திறன் தேவை ஏனெனில் சுருக்கங்களை நீக்க தோல் சீராக நீட்டப்பட வேண்டும். நல்ல நீட்டிப்பு தோல் பரப்பு பகுதியை 5 - 10% அதிகரிக்கலாம். இந்த நிலையில், ஈரமான தோலில் உள்ள நீர் ஒட்டும் பொருளாக செயல்பட்டு தோலை அது தரையோடு இறுக்கமாக பிடிக்கின்றது. தோல் காய்ந்தவுடன் அது தானாக தரையிலிருந்து விடுபட்டு விடும். இதற்கு பிறது அது குறிக்கப்பட்டு தடித்த அட்டைகள் மற்றும் கத்தரிக்கோல்களை கொண்டு அளவுகளில் வெட்டப்படுகின்றது. புடைப்பு ஏற்படுத்த வேண்டிய துண்டுகள் ஒரு பஞ்சால் ஈரப்படுத்தப்பட்டு ஒரு உருளை ஊசியால் உருட்டப்படுகின்றன. பழைய கடித அச்சகங்களில் பயன்பட்ட அமில செதுக்குதல் முறை மூலம் விருப்பமான அளவிற்கு தகுந்தாற்போல் ஒரு பாளம் உருவாக்கப்படுகின்றது. அச்சு ஒரு பந்து அழுத்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மேலும் தோல் அச்சு மற்றும் ஒரு கடின ரப்பர் தகடிற்கு இடையே வைக்கப்பட்டு பலமாக அழுத்தப்படுகின்றது. தோல் மீண்டும் உருமாதிரிகளுக்கு தருந்தாற்போல் வெட்டப்பட்டு பைகள் அல்லது பெட்டிகள் செய்ய ஒழுங்குபடுத்தப்படுகின்றன. விறைப்பான அட்டைகளை பயன்படுத்தி பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன மேலும் அனைத்தும் ஒரு இரப்பர் அடிப்படை பசையை பயன்படுத்தி ஒன்றாக ஒட்டப்படுகின்றன. தடித்த அட்டை ஒரு அச்சை பயன்படுத்தி வெட்டப்படுகின்றது. ஏனெனில், வெட்டுதல் மிக நுணுக்கமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய பிழை கூட பையின் இறுதி வடிவத்தை பாதிக்கலாம். தோல் கைவினைப்பொருளின் தொழிற்நுட்பத்திறன்:- பல்வேறு மற்ற தொழிற்நுட்பங்கள் ஒரு முழுமையான தயாரிப்பை உருவாக்குவதில் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானவை சீவுதல் (நாகரீக கலைஞர்கள் இதை பார்க்காத போதும் தோலின் தடிமனை அதிகரிக்காமல் அதின் முனையை மறைப்பதற்காக), மடித்தல் (ஒரு சீரான மடிப்பை உறுதிப்படுத்த), அடித்தல் (ஒரு மர சம்மட்டியின் உதவியுடன் பசையின் விளைபயனை அதிகரிக்க) மற்றும் பளபளப்பாக்குதல் (பளபளப்பான பரப்பு, அழுத்தம் மற்றும் சூட்டை தருவதற்காக ஒரு மிருதுவான கல் அல்லது கண்ணாடி துண்டால் தேய்த்தல், இது துளைகளை மூடுகிறது மேலும் தோலிற்கு ஒரு அதிக மற்றும் சீரான அடர்த்தியை தருகிறது). பைகள் துண்டுகளை ஒரு தையல் இயந்திரத்தை பயன்படுத்தி தைத்து தயாரிக்கப்படுகின்றன. துணி தைத்தல் போல அல்லாமல், தோல் ஒரு கனரக இயந்திரத்தால் தைக்கப்பட வேண்டும் மேலும் ஒரு குறிப்பிட்ட அளவு முன் தையல் ஒட்டும் பண்பு, துண்டு இடத்தில் இருக்கத் தேவைப்படுகின்றது. மர கைவினைப் பொருள்:- தமிழ்நாட்டின் சில இடங்கள் மர கைவினைக் கலைக்கு பெயர்பெற்றவைகளாகும். விருதுநகர், நாகர்கோயில், சுசீந்திரம் ஆகிய இடங்களில் தலைமுறை தலைமுறையாக மர கைவினைக் கலையின் பாரம்பரியத்தை வழிமாற்றி வந்துள்ளது. மதுரை ரோஸ்வுட் (கருங்காலி) மீதான தன் செதுக்கல்களுக்காக அறியப்படுகின்றது. இந்த வகை செதுக்குதல்களில், அவை கடினமான செதுக்கல்களுடன் உள்ள தெளிவான கருத்துக்களாகும். மேஜை மேல் பக்கங்கள் மலர் சின்னங்கள் அல்லது கிளிகள் அல்லது பலகைகளால் மூடப்பட்டிருக்கும் இவைகளில் மகாபாரதம் அல்லது இராமாயணத்திலிருந்து காட்சிகள் செதுக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கோயில் தேர்கள் மரத்தால் செய்யப்படுகின்றன மேலும் வை விரிவான மற்றும் திறமையான செதுக்கல்களால் நிறைந்துள்ளன. 19 நூற்றாண்டின் பழமையான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாமபுரம் அரண்மனை தன் நேர்த்தியாக செதுக்கப்பட்ட கூரைச் சுவர்கள், கடைசல் இயந்திர பகுதிகள், செதுக்கப்பட்ட ஜன்னல் கம்பிகள் மற்றும் அலங்காரப்படுத்தப்பட்ட மர உட்கூரைகள் ஆகியவைகள் மூலம் கடுஞ்சிக்கலான மர செதுக்கலை காண்பிக்கும் ஒரு நேர்த்தியான மர அரண்மனைக்கான ஈர்க்கும் எடுத்துக்காட்டகும்.இன்றும் ஒரு புனிதமான நுழைவாயிலாக கருதப்படும், ஒவ்வொரு வீட்டின் முன் கதவும், இந்து கடவுள்கள் மற்றும் ஹம்சா/ புராண அன்னம், பத்மா/ தாமரை. பூர்ணகும்பம்/அட்சயப்பாத்திரம், காமதேனு மற்றும் உருமாரியிடப்பட்ட மலர்ச் சின்னங்கள் போன்ற மங்களகரமான சின்னங்களின் மர செதுக்கல்களை பெற்றுள்ளது.மற்ற மர செதுக்கப்பட்ட பொருள்கள் சிறிய புனிதப் பேழைகள் மற்றும் கடவுள்கள், திருமணங்களுக்கான குறைவாக செதுக்கப்பட்ட உட்காரும் பலகைகள், கடவுளுக்கான செதுக்கப்பட்ட விசிறிகள், செழுமையான தம்பதிகள் மற்றும் பல்வேறு சிறிய சடங்களுக்குரிய கொள்கலன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. செதுக்கப்பட்ட கடவுள்களின் பலகைகள், மற்ற சடங்கு பொருட்கள் உள்ள ஒரு மீட்டர் நீள கழியின் இரு முனைகளிலும் பொருத்தப்படும். இந்த பலகைகள் காவடி என அழைக்கப்படுகின்றன. இவை கடவுள் முருகன் அல்லது கார்த்திகேயனுக்கு வேண்டுதல்களை நிறைவேற்றும் ஒரு நபரின் தோள்களில் சுமந்து செல்லப்படும். அரைவை இயந்திரங்கள், காய்கறி வெட்டும் கருவிகள் மற்றும் அகப்பை தாங்கிகள் போன்ற மரத்திலான வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையில் கொடுக்கப்படும் பொருட்களாகும். பிரகாசமான நிறங்களில் உள்ள மற்றும் எளிதாக வாங்கக் கூடிய தோலால் செய்யப்பட்ட மற்றும் சாயம் பூசப்பட்ட பொம்மைகள் மாநிலம் முழுவதும் பிரபலமானவைகள் ஆகும். கைவினைஞர்களின் கைத்திறனை வெளிக்காட்டும் செதுக்கப்பட்ட மர பொம்மைகள், கைப்பாவைகள் மற்றும் யானைகள் ஆகியவையும் தயாரிக்கப்படுகின்றன. மர செதுக்குதலின் மூலப்பொருட்கள்:- அடிப்படை பொருள் : பர்குல் அல்லது குலார் மரம், மாமரம், பச்சை மூங்கில், ஷிஷம் மரம் நிறமூட்டும் பொருள் : ஆல்டா, மஞ்சள்அடிப்படை பொருள் : தூதியா மரம், அரக்கு, அரக்கு குச்சி, எண்ணெய், எண்ணெய்த் துணி, நிறமூட்டப்பட்டத் தாள்.அடிப்படை பொருள் : துணியின் மிச்சங்கள், மூங்கில், முரட்டு ஓடுகள், காகிதம் நிறமூட்டும் பொருள் : சாய நிறங்கள்அடிப்படை பொருள் : பன்கி மரம், புளியங்கொட்டைகள், சுண்ணாம்பு பசை, தூரிகை, சிவப்பு சந்தன மரம் அடிப்படை பொருள் : துணிகள், நிறங்கள், நிரப்புதலுக்கான வீணான பொருட்கள், நிறமுள்ள காகிதங்கள், களிமண் மரம் செதுக்குதலின் செயல்முறை:- மரம் தயாரிக்கப்பட வேண்டிய உருவத்தின் அளவிற்கு தகுந்தாற்போல் கட்டையிலிருந்து வெட்டியெடுக்கப்படுகின்றது. துண்டு சுத்தம் செய்யப்பட்டு மிருதுவாக்கப்படுகின்றது. தயாரிக்கப்பட வேண்டிய பொம்மையின் வடிவம் இந்த துண்டில் படியெடுக்கப்படுகிறது. கூடுதல் மரம் வடிவத்திற்கு தகுந்தாற்போல் வெட்டியெடுக்கப்படுகின்றது. வடிவமைக்கப்பட வேண்டிய பகுதி மீது வைக்கப்பட்டுள்ள உளி மீது சுத்தியலால் சீரான அடிகள் தரப்படுகின்றன. இது ஒரு அரத்தை கொண்டு மிருதுவாக்கப்பட்டு பின் வண்ணம் தீட்டப்படுகின்றது. வண்ணம் தீட்டுதல் உடலின் பல்வேறு பகுதிகளை வண்ணம் தீட்டுதலிருந்து ஆரம்பிக்கின்றது. அடுத்து குறிப்பிட்ட வடிவமைப்புகளுடனான ஆடைகள் தூரிகையில் சீரான தீட்டுதல் மூலம் குறிக்கப்படுகின்றன. முக அமைப்புகள் இறுதியாக சேர்க்கப்படுகின்றன. சுக்கா (கிளி) என்பது திருமண மண்டபத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள மர பொம்மைகளாகும். மொசாரா, (மையப் பகுதி), சார்கி மற்றும் சுக்கா (கிளிகள்) அதே முறையில் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் மூங்கில் கிள்ளியால் (திருகு) இணைக்கப்படுகின்றன. திருமண பந்தக்கால் மஞ்சள் (மஞ்சள்), சிவப்பு (குங்குமம்) மற்றும் பச்சை நிறங்களில் வண்ணம் பூசப்படுகின்றன. மெருகெண்ணெய் பூசுதல் அரக்குக் குச்சியை சுற்றும் கலைப்பொருளுக்கு எதிராக அழுத்துவதன் மூலம் செய்யப்படுகின்றது. சிறந்த பளபளப்பிற்காக அதே சமயம் எண்ணெயும் இடப்படுகிறது. பிழியப்பட்ட கற்றாழை இலைகள் பளபளப்பேற்றலுக்காக பயன்படுத்தப்படுகின்றது. கலைப்பொருட்கள் ஒரே நிறத்திலோ அல்லது வேன்னேறு நிறங்களின் கூட்டணியிலோ இருக்கும். கடினமான வடிவமைப்புகள் மற்றும் நிற அமைப்புகள் பல்வேறு வகையான தொழிற்நுட்பங்களை பயன்படுத்தியும், அரக்குப் பொருட்களை கையாண்டும் விளைவிக்கப்படுகின்றன. ஜெய்ப்பூரில், பொம்மைகள் பழைய துணியை மீண்டும் சாயமேற்றி, வீணான பொருட்களால் நிரப்பப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. அவைகள் மகிழ்வோடு வண்ணக் காகிதங்கள் மற்றும் ஜிகினாத் தகடுகளால் அலங்காரப்படுத்தப்படும் போது, அவைகள் குறிப்பாக தங்களது உணர்ச்சிமிக்க முகங்களோடு மிகவும் உயிர்ப்போடு காணப்படுகின்றன. கந்தைத் துணி பொம்மைகள் பொதுவாக தூக்கியெறியப்படும் துணியின் மிச்சங்களால் தயாரிக்கப்படுகின்றன. இவைகள் கடுமையான உழைப்புடன் பல்வேறு நிற அமைப்புகளை உருவாக்க சேகரிக்கப்பட்டு, பல்வேறு சாயல்களில் சாயமேற்றப்படுகின்றன. கண்கள் மற்றும் வாய் கருப்பு கோடால் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஒரு அரசி பொம்மையாக இருந்தால், துணிகள் & உடல் முழுமையாக அலங்காரப்படுத்தப்படும். மர செதுக்குதலின் தொழில்நுட்பத்திறன்கள்:- ஒரு பொருளை தயாரிப்பதற்காக வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத் துண்டும், அனைத்து ஈரத்தன்மையையும் வெளியேற்ற மெல்லிய தீயில் சூடுபடுத்தும் செயல்முறைக்கு உட்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தனி கை காலும் தனித்தனியாக செதுக்கப்பட்டு உடலுடன் புளியங்கொட்டை பசையால் இணைக்கப்படுகின்றது. பின்னர் இது சுண்ணாம்பு பசை படலம் வழியே கொண்டு செல்லப்படுகிறது. நிறங்களுடனான வண்ணம் தீட்டுதல், ஆடுகளின் முடியால் தயாரிக்கப்பட்ட தூரிகைகளால் மிக நுண்ணிய திருத்தங்களுடன் செய்யப்படுகிறது. நீர் மற்றும் எண்ணெய் நிறங்கள் இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன. மெருகெண்ணெய் பூசுதல் ஒரு கடைசல் இயந்திரம், கை அல்லது இயங்கும் இயந்திரத்தில் செய்யப்படுகின்றது. மிகக் குறைவான மற்றும் மிக நுட்பம் வாய்ந்த பொருட்களுக்கு, கை கடைசல் இயந்திரம் பொருத்தமானதாக கருதப்படுகின்றது. அரக்கு கடைசல் இயந்திர பொருட்கள் உருவாக்கும் முறையில், அரக்கு காய்ந்த நிலையில் இடப்படுகின்றது. அதாவது மெருகேற்றப்பட வேண்டிய மரப் பொருளிற்கு எதிராக அரக்குக் குச்சி அழுத்தப்படுகின்றது. மரப்பொருள் சுற்றிக் கொண்டிருக்கும் போது, உராய்வினால் வெப்பம் ஏற்பட்டு, அரக்கு உருகி, வண்ண குச்சியை உருவாக்குகிறது. மெருகெண்ணெய் பொம்மைகள் இம்முறையில் தயாரிக்கப்படுகின்றன. பல நிறங்கள் பயன்படுத்தப்படும்போது கைவினைஞர்கள் குச்சியை கையாளும் குறிப்பிடத்தகுந்த திறனுடன் இது செய்யப்படுகின்றது. சில மெருகேற்றப்பட்டத் துண்டுகள் ஒரு தூரிகையால் வண்ணம் தீட்டப்படுகின்றன. எப்படி சென்றடைவது:- பாண்டிச்சேரி தென்கிழக்கு இந்திய பகுதியில் தமிழ்நாடு மாநிலத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. பாண்டிச்சேரியிலிருந்து சென்னை 162 கிமீ தூரத்திலும், பெங்களூர் 320 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. பாண்டிச்சேரிக்கு மிக அருகாமையிலுள்ள விமானநிலையம் சென்னை (160 கிமீ). சென்னை விமான நிலையம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பகுதி மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து பகுதி என பிரிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி ஒரு இரயொல் நிலையத்தை பெற்றிருந்த போதிலும், இரயில் போக்குவரத்து விழுப்புரம் மற்றும் சென்னையுடன் மட்டுமே உள்ளது.